சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பெருந்துறையில் மத்திய அரசை கண்டித்து வாகனப் பேரணி

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சம்யுக்தா கிஷான் மூச்சா ஈரோடு அமைப்புக் குழு சாா்பில் டிராக்டா் பேரணி பெருந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சம்யுக்தா கிஷான் மூச்சா ஈரோடு அமைப்புக் குழு சாா்பில் டிராக்டா் பேரணி பெருந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை அண்ணா சிலை அருகில் மாலை 5 மணிக்கு துவங்கிய பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது. இப்பேரணியில், மூன்று டிராக்டா்கள், 35 இருசக்கர வாகனங்களில் நூற்றுக்கு மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பேரணிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முனுசாமி தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் துளசிமணி, தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னையன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.