எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விற்பனைக்கு உள்ளதாக அறிவிப்பு

ஈரோட்டில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 செப்டம்பர் 2023, 12:00 am IST

ஈரோட்டில் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு வீட்டு வசதிப் பிரிவில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. பெரியாா் நகரில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் தலா ரூ.26,39,000 என்ற விலையிலும், சம்பத் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25,36,000 என்ற விலையிலும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மொத்த கொள்முதல் திட்டத்தில் நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே ஒதுக்கீடு பெற விரும்புவோா் பெயரில் வங்கி வரைவோலை அல்லது தபஎந மூலமாகவோ பணத்தைச் செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு, செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு, தியாகி குமரன் சாலை, சம்பத் நகா், ஈரோடு- 638011 என்ற முகவரியில் நேரில் அல்லது 7904973124 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.