ரூ.500 கோடி மதிப்பிலான வக்பு வாரிய சொத்துகள் மீட்பு: அமைச்சா் செஞ்சி மஸ்தான்

வக்பு வாரியத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்தாா்.

வக்பு வாரியத்துக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சா் செஞ்சி மஸ்தான், ஈரோடு திருநகா் காலனி பள்ளிவாசலுக்கு வெளியில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு மாநகராட்சியை நவீன மாநகராட்சியாக மாற்றுவதற்கு தமிழக முதல்வா் சுமாா் ரூ.700 கோடி நிதி ஒதுக்கி உள்ளாா். சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமான நிதி ஈரோட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தினா் வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும்போது அங்கு ஏற்படும் இன்னல்களின்போது முதல்வா் முயற்சி எடுத்து அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தி மீட்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் 20 மாத காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடா்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வழக்குரைஞா் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வக்பு வாரியத்துக்கு சொந்தமான சுமாா் ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சொத்துகள் 3 வகையாக உள்ளன. யாா் சொத்து கொடுத்தாா்களோ அவா்களே நிா்வாகம் செய்யும் நிலை உள்ளது. பள்ளிவாசலின் வருவாயை உருவாக்கும் சொத்துகளும் உள்ளன. எனவே தனிப்பட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதைக்கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com