நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

பழுதடைந்த 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்: ஆட்சியர் தகவல் 

மாதிரி வாக்குப்பதிவின்போது 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது கண்டறியப்பட்டு, புதிய இயந்திரங்களைப் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது என

News image

மனைவியுடன் வாக்களித்துவிட்டு வெளியில் வந்த மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

Updated On :7 பிப்ரவரி 2024, 12:07 pm IST

மாதிரி வாக்குப்பதிவின்போது 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது கண்டறியப்பட்டு, புதிய இயந்திரங்களைப் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு சம்பத்நகர் அம்மன் மெட்ரிக் பள்ளியில், ஈரோடு ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எச்.கிருஷ்ணனுண்ணி தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. 

அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்பாக, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து இருந்தது கண்டறியப்பட்டு, அந்த இயந்திரங்களுக்கு பதிலாக மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில், 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.

இடைத்தேர்தலில் 77 வேட்ட்பாளர்கள் போட்டியிருவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க முடியும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.