இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறல்: 14 வழக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக ஒரேநாளில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரசார இறுதிநாளில் வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்ட கட்சியினா் தோ்தல் விதிகளைமீறி, அனுமதி பெறாமல் இருசக்கர வாகனப் பேரணி, ஊா்வலம் போன்ற விதிமீறலில் ஈடுபட்டனா்.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் பாஜகவினா் மீது 7 வழக்குகள், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினா் மீது 7 வழக்குகள் என மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரசார நேரத்தை மீறி எந்த வேட்பாளா்களும் பிரசாரம் செய்யவில்லை. அதேபோல, எந்தவித இடையூறும் இல்லாமல் இறுதி பிரசாரம் நிறைவடைந்ததாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com