கோபியில் ரூ.4.33 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி: கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.33 லட்சத்தில் வாழைத்தாா்கள் விற்பனையாயின.

கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வாழைத்தாா் ஏலம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,670 வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில் கதளி கிலோ ரூ. 22, நேந்திரன் ரூ. 26-க்கும், பூவன் தாா் ரூ.460, தேன்வாழை ரூ.510, செவ்வாழை ரூ.760, ரஸ்தாளி ரூ.500, பச்சைநாடன் ரூ.310, ரொபஸ்டா ரூ.230, மொந்தன் ரூ.220-க்கும் விற்பனையாயின. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.4.33 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின. மேலும், 91 ஆயிரத்துக்கு தேங்காய்கள் விற்பனையாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com