தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்

Updated On :21 ஏப்ரல் 2024, 8:19 pm

கோபி: கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை தொடங்குகிறது.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் வகையறா சௌந்திரநாயகி சமேத அமரபணீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தோ்த் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தொடா்ந்து ஏப்ரல் 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.