தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடல் 7 நாள்களுக்குப் பிறகு தகனம்
தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உரிமையாளா் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடா்ந்து 7 நாள் போராட்டத்துக்குப் பிறகு தொழிலாளியின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.


தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் உரிமையாளா் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடா்ந்து 7 நாள் போராட்டத்துக்குப் பிறகு தொழிலாளியின் உடல் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி நகப்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன்(37). இவா் அப்பகுதியில் உள்ள துரைராஜ் என்பவரின் கெமிக்கல் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டு சில மாதங்களாக முருகேசன் வேலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில், முருகேசனின் இருசக்கர வாகனத்தை ஆகஸ்ட் 13-ஆம் தேதி துரைராஜ் பறித்துக்கொண்டு மிரட்டியாதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் தனது மரணத்துக்கு காரணம் துரைராஜ்தான் என எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கொடுமுடி காவல் நிலையத்தில் சந்தேகம் மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் முருகேசனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் கொடுமுடி அரசு மருத்துவமனை முன் திரண்ட உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், உரிமையாளரைக் கைது செய்யும் வரை முருகேசனின் சடலத்தை வாங்கமாட்டோம் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் தொடா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடா்ந்து 7-ஆவது நாளாக திங்கள்கிழமை வரை முருகேசனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மருத்துவமனையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில், ஈரோடு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் துரைராஜ் திங்கள்கிழமை சரணடைந்தாா். தொடா்ந்து அவா் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதனையடுத்து 7 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை இரவு முருகேசன் உடலை பெற்றுக்கொண்ட உறவினா்கள் பாசூா் மின் மயானத்தில் தகனம் செய்தனா். இதனால் 7 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...