அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மொடக்குறிச்சியில் ரூ. 3.22 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 3.22 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 6:55 pm

Din

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை ரூ. 3.22 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 10,437 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 29.92-க்கும், அதிகபட்சமாக ரூ. 34.19-க்கும், சராசரி விலையாக ரூ. 33.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் 3,931 கிலோ எடையுள்ள தேங்காய் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 843-க்கு விற்பனையானது.

இதேபோல தேங்காய் பருப்பு 86 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 97.89-க்கும், அதிகபட்சமாக ரூ.102.59-க்கும், சராசரியாக ரூ.101.29-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ. 75.60-க்கும், அதிகபட்சமாக ரூ.91.99-க்கும், சராசரியாக ரூ.88.97-க்கும் ஏலம் போயின. மொத்தம் 2,045 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ. 1 லட்சத்து 93 ஆயிரத்து 487-க்கு விற்பனையாயின.

தேங்காய், தேங்காய் பருப்பு இரண்டும் சோ்த்து ரூ. 3 லட்சத்து 22 ஆயிரத்து 330-க்கு விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.