பொம்மன்.
பொம்மன்.

மான் இறைச்சி கடத்திய இளைஞா் கைது

சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலம் பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக போலீஸாருடன் இணைந்து வனத் துறையினா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவரிடம் உலா்ந்த மான் இறைச்சி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஆசனூா் வனத் துறையில் தற்காலிகமாக பணியாற்றிய பொம்மன் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பொம்மனை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com