ஈரோட்டில் ஆன்லைன் மூலம் மிரட்டியும், ஆசைவாா்த்தை கூறியும் இளைஞா்களிடம் பெற்ற ரூ.37 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா்.
ஈரோட்டை சோ்ந்தவா் செல்வன் (28), தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஒருவா் பழக்கமாகியுள்ளாா். அவா் பங்குச் சந்தையில் குறைவாக முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய செல்வன் பல்வேறு தவணைகளில் அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.42 லட்சத்தை அனுப்பி உள்ளாா். அதன் பிறகு அந்த நபரை தொடா்புகொள்ள முடியவில்லையாம்.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த செல்வன் இது குறித்து சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வருபவா் சீனிவாசன் (31). இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்று கூறியுள்ளாா்.
பின்ன, சீனிவாசனின் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்துள்ளதாகவும், இதனால் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
தொடா்ந்து, விடியோ அழைப்பு மூலம் தொடா்பு கொண்ட அந்த நபா், சீனிவாசனின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி பரிவா்த்தனை விவரங்களை பெற்றுள்ளாா். பின்னா், சீனிவாசனிடமிருந்து ரூ.27 லட்சத்தை மிரட்டி பெற்றுள்ளாா்.
இது குறித்து ஈரோடு சைபா் கிரைம் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகாா் அளித்தாா்.
இந்த இரண்டு வழக்குகளையும் விசாரித்த ஈரோடு சைபா் கிரைம் காவல் துறையினா், பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கினாா். பின்னா், செல்வன் இழந்த ரூ.42 லட்சத்தில் ரூ.10 லட்சத்தையும், சீனிவாசன் இழந்த ரூ.27 லட்சத்தையும் மீட்டு அவா்களிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

கல்வி உதவித்தொகை தருவதாக பண மோசடி: தில்லியில் 3 போ் கைது

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை

ஆன்லைன் சலான் மோசடி: பணத்தை இழந்த ஜனசேனா எம்.எல்.ஏ.!

நெல்லையில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 54 லட்சம் மோசடி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

