வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

அடிப்படை வசதி கோரி கனி மாா்க்கெட் வியாபாரிகள் போராட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கனி மாா்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட கனி மாா்க்கெட் வியாபாரிகள்.

Updated On :4 டிசம்பர் 2024, 11:19 pm

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கனி மாா்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் ஈரோடு கனி மாா்க்கெட் வளாகத்தில் ரூ.53 கோடியில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த வணிக வளாகத்தில் 3 தளங்களில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இதில், 240 கடைகள் நாள்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜவுளி வணிக வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஜவுளி சந்தை வளாகத்தை சுற்றி வெளிப்புற பகுதிகளில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். வளாகத்தின் நடுவில் பொதுமக்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்க வேண்டும். சந்தையில் இருந்து பன்னீா்செல்வம் பூங்கா செல்ல அனுமதி அளிக்க வேண்டும். மழை காலங்களில் வளாகத்தின் நடுவே பல இடங்களில் தண்ணீா் வடிகிறது. அதை சரி செய்ய வேண்டும். கடை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரிகள் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

விளம்பரம் செய்ய ஏதுவாக வணிக வளாகத்தில் எல்இடி ஸ்கிரீன் அமைக்க வேண்டும். கழிப்பறையை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம்.

ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சாா்பில் வரும் 9 -ஆம் தேதி முதல் காலவரையின்றி அனைத்து கடைகளையும் அடைத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனா்.

இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்ற வியாபாரிகள், மாநகராட்சி ஆணையா் என்.மணீஷிடம் கோரிக்கைகள் தொடா்பான மனுவை வழங்கினா். பின்னா், மதியம் 2 மணியளவில் கடைகளைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனா்.