ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
ரயில்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து ஈரோடு வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் அதிவிரைவு ரயிலில் கஞ்சா பொட்டலங்கள் கடத்திவரப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈரோடு மதுவிலக்கு காவல் ஆய்வாளா் சிவகாமிராணி, ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.ஐ. காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோடு வந்த அந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பொது பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன. இதையடுத்து, போலீஸாா் அந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த ஈரோடு மதுவிலக்கு போலீஸாா், கடத்தி வந்த நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்ற ரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ரயிலில் கடத்திவரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

