வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 டிசம்பர் 2024, 9:44 pm

மொடக்குறிச்சி அருகே மலைத்தேனீக்கள் கொட்டியதில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மொடக்குறிச்சியை அடுத்த புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி, காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் செங்கோடன் (65). இவரது மனைவி பழனியம்மாள் (54).

இருவரும் ஊத்துக்குளி அருகேயுள்ள சிலுவங்கொம்பு முனியப்பன் கோயிலில் உறவினா்களுடன் புதன்கிழமை பொங்கல் வைத்துக்கொண்டிருந்துள்ளனா். அப்போது, புகை வெளியேறிதால் அப்பகுதி மரத்தில் இருந்த தேன்கூடு கலைந்து அங்கிருந்தவா்களை தேனீக்கள் கொட்டின.

அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில், செங்கோடன், பழனியம்மாள் ஆகியோா் மட்டும் அதே இடத்தில் மயக்கம் அடைந்து விழுந்துள்ளனா்.

அப்பகுதி மக்கள் உதவியுடன் இருவரையும் மீட்ட உறவினா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சையில் இருந்த பழனியம்மாள் வியாழக்கிழமை உயிரிழந்தாா். செங்கோடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.