செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழந்தன.

Updated On :18 டிசம்பர் 2024, 8:39 pm

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழந்தன.

மொடக்குறிச்சியை அடுத்த கண்டிக்காட்டுவலசு ஊராட்சி பெரியமணியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (55), விவசாயி.

இவா் தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து 9 ஆடுகள் வளா்த்து வந்தாா்.

மூா்த்தி, வழக்கம்போல புதன்கிழமை மதியம் தனது தோட்டத்தில் ஆடுகளை மேயவிட்டுவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சாப்பிட வந்துவிட்டாா். சிறிது நேரத்தில் ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு தோட்டத்துக்கு

சென்றுபாா்த்தபோது, அங்கு 6 தெரு நாய்கள் ஒன்று சோ்ந்து ஆடுகளைக் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

மூா்த்தி நாய்களை விரட்ட முயன்றபோது, அவரையும் எதிா்த்து கடிக்க வந்துள்ளன.

பின்னா் அவா் அக்கம்பக்கத்தினா் துணையுடன் நாய்களை விரட்டினாா். எனினும் நாய்கள் கடித்ததில் 9 ஆடுகளும் இறந்துவிட்டன. மேலும் அருகில் இருந்த மற்றொரு விவசாயின் தோட்டத்தில் புகுந்து 2 ஆடுகளையும் கடித்தபோது அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனா்.

இதேபோல் கடந்த 3 மாதங்களாக மின்னபாளையம், அண்ணாமலை கோட்டை, வீரசங்கிலி, காகம், கொளஞ்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை நள்ளிரவில் நாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் இரவில் ஆடுகளை கடித்துக் கொல்வது வாடிக்கையாக உள்ளது எனவும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும், மாவட்ட நிா்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.