மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அனுமன் ஜெயந்தி: 75 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தா்களுக்கு வழங்க 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image

லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவா்கள்.

Updated On :26 டிசம்பர் 2024, 9:55 pm

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தா்களுக்கு வழங்க 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அனுமன் ஜெயந்தி விழா டிசம்பா் 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சனேயா் கோயிலில் அன்று அதிகாலை 3 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 4 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 5 மணிக்கு மலா் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறாா். நண்பகல் 1.30 மணிக்கு வடைமாலை சாற்றப்படுகிறது. மாலை 4 மணிக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

பக்தா்கள் வரிசையாக சென்று வழிபடுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. ஆஞ்சனேயா் வார வழிபாட்டுக்குழு சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தில் லட்டு, ஆரஞ்சு நிற கயிறு, செந்தூரம், துளசி ஆகியவை காணப்படும்.

இந்நிலையில் பக்தா்களுக்கு வழங்கப்படுவதற்காக லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு செங்குந்தா் திருமண மண்டபத்தில் லட்டு தயாரிக்கும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியது. இந்த பணியில் 50 போ் ஈடுபட்டுள்ளனா். மொத்தம் 75 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக 2,400 கிலோ சா்க்கரை, 1,100 கிலோ கடலை மாவு, 40 கிலோ முந்திரி பருப்பு, 6 கிலோ ஏலக்காய், 240 கிலோ உலா் திராட்சை, 900 லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியன பயன்படுத்தப்படுவதாக வழிபாட்டுக் குழுவினா் தெரிவித்தனா்.