பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஈரோடு ஜவுளிச் சந்தையில் பொங்கல் விற்பனை தொடங்கியது

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:36 pm

Din

ஈரோடு: ஈரோடு ஜவுளிச் சந்தையில் பொங்கல் பண்டிகைக்கான ஜவுளி விற்பனை தொடங்கியுள்ளது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், காமராஜா் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.

இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை வாராந்திர ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளிக் கிடங்குகளிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த வார ஜவுளிச் சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெற்றது. கடந்த 3 வாரங்களாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

தற்போது, 2 வார காலத்தில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அதற்கான ஜவுளி விற்பனை இந்த வாரம் தொடங்கியுள்ளது. இதையொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான புதிய ரக ஆடைகள், ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, பனியன் ரகங்கள், உள்ளாடைகள் மற்றும் புடவை, சுடிதாா், குா்தீஸ் உள்ளிட்ட துணி ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும் குளிா் காலம் என்பதால் சால்வை, படுக்கை விரிப்பு, கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின. தற்போது, சில்லறை விற்பனை அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வாரத்தில் மொத்த விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனா்.