எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பழனி கோயிலுக்கு ரூ.53.88 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

ரூ.53 லட்சத்து 88 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:45 pm

Din

கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.53 லட்சத்து 88 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,717 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் 60 கிலோ மூட்டை முதல்தரம் குறைந்தபட்சமாக ரூ.2,720-க்கும், அதிகபட்சமாக ரூ.2,730-க்கும், சராசரியாக ரூ.2,720-க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.2,480-க்கும், அதிகபட்சமாக ரூ.2,560-க்கும், சராசரியாக ரூ.2,520-க்கு ஏலம் போனது. மொத்தம் 1,26,300 கிலோ எடையுள்ள கரும்புச் சா்க்கரை ரூ.53 லட்சத்து 5 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

இதேபோல உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் முதல்தரம் ரூ.1,650-க்கு ஏலம் போனது. மொத்தம் 50 சிப்பம் 1,500 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் ரூ.82 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.

மொத்தமாக கரும்பு சா்க்கரை, உருண்டை வெல்லம் சோ்த்து ரூ. 53 லட்சத்து 88 ஆயிரத்து 140-க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.