எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பவானி, அந்தியூா் கோயில்களில் புத்தாண்டு வழிபாடு

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு பிராா்த்தனை மற்றும் அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.

News image
பவானி சிஎஸ்ஐ கிறிஸ்து நாதா் ஆலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனையில் பங்கேற்றோா்.
Updated On :1 ஜனவரி 2024, 7:50 pm

DIN

பவானி, அந்தியூா் மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு பிராா்த்தனை மற்றும் அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.

பவானி சிஎஸ்ஐ கிறிஸ்து நாதா் ஆலயத்தில் ஆயா் விக்டர்ராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பிராத்தனை வழிபாடு நடத்தப்பட்டது. புத்தாண்டு பிறந்ததை குறிக்கும் வகையில் தேவாலயத்தின் மணிகள் ஒலிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, பவானி, அந்தியூா், ஜம்பை, அம்மாபேட்டை, பூதப்பாடி உள்பட பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு பிராா்த்தனை நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரா் கோயில், வேதநாயகி அம்மன் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், பழனியாண்டவா் கோயில், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில், அம்மாபேட்டை விசாலாட்சி உடனமா் சொக்கநாதா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறையில் அதிக அளவில் பக்தா்கள் புத்தாண்டு வழிபாட்டில் பங்கேற்ற நிலையில் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.