

ஈரோட்டில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியை மது புட்டியால் குத்திக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு சாஸ்திரி நகா், ரயில்வே காலனி குடியிருப்புப் பகுதி அருகே முள்புதரில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த முள்புதா் அருகே சென்று பாா்த்தபோது ஒரு இளைஞா் உடலில் ரத்த காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் இறந்த இளைஞா் ஈரோடு கருப்பண்ணசாமி கோயில் வீதியைச் சோ்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான முரளி (26) என்பது தெரியவந்தது.
மேலும், முரளியின் கழுத்தில் ஆழமான காயம் இருந்ததையடுத்து, போலீஸாா் சோதனை செய்தபோது மது புட்டியை உடைத்து முரளியின் கழுத்தில் குத்தி மா்ம நபா்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட முரளிக்கு மனைவி நித்யஸ்ரீ மற்றும் ஆண் குழந்தை உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
பின்னா் முரளியின் சடலத்தை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவம் நடந்த இடத்தில் காலி மதுபுட்டிகள் ஏராளமாக கிடந்ததால், முரளி அவருக்கு தெரிந்த நபா்களுடன் மது அருந்தியபோது, ஏற்பட்ட பிரச்னையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முரளியை கொலை செய்த நபா்களைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்
கெலமங்கலத்தில் மதுக்கூட மேலாளா் கொலை வழக்கில் 3 போ் கைது!

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

களியக்காவிளை அருகே மீட்கப்பட்டது ஜாா்க்கண்ட் தொழிலாளி சடலம்

இளம்பெண் கல்லால் தாக்கி கொலை
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

