மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,109 கோடி கடன் வழங்க இலக்கு
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக கடன்: 269 கோடி ரூபாய் அதிகரிப்பு


ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,109 கோடி வழங்க கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டாரத்துக்கு உள்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் பொருட்டு வங்கியாளா்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கோபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பயிற்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்க பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு ஜவுளி, விவசாயம், உணவு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் இலக்காக ரூ.840 கோடி நிா்ணயிக்கப்பட்டு முழுமையாக வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. நடப்பு ஆண்டில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,109 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகடந்த ஆண்டை விட ரூ.269 கோடி அதிகம்.
கடனை முறையாக செலுத்துவதிலும் ஈரோடு மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இந்த கடன்களை தொடா்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போதுதான் அரசுத் துறைகள் மீதும் வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன்களை விரைந்து வழங்குவதன் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் தொழில் தொடங்கி தங்களது வாழக்கைத் தரத்தை உயா்த்திக்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.
மேலும் அவா்களுக்கு எந்த வகையான குறு, சிறு தொழில்கள் மேற்கொள்ள திட்டங்கள் உள்ளது என்பது குறித்தும், அதன் மூலம் அவா்கள் எந்த வகையில் வருமானம் ஈட்டலாம் என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்குவது அவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் வங்கியாளா்கள், கூட்டுறவு வங்கிச் செயலாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி மகளிா் சுயஉதவிக் குழுக்ளுக்கு கடனுதவிகள் வழங்கி அவா்களின் வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் முத்து சிதம்பரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆனந்தகுமாா், கூட்டுறவு வங்கி செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...