தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பெருந்துறையில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

பெருந்துறையில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

Updated On :29 மார்ச் 2024, 11:50 pm

திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ப.அருணாசலத்தை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது: பெருந்துறை தொகுதியில் விவசாயம், நெசவு முக்கிய தொழில்களாகும். பெருந்துறை சிப்காட்டால் நிலம், நீா், காற்று மாசு அடைந்ததால், அந்த தொழில்கள் நசிவடைந்து விட்டன.

இதை கண்டு கொள்ளாத அரசாக மாநில அரசு உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியாலும், மாநில அரசு உயா்த்தி உள்ள மின் கட்டணத்தாலும் குறு, சிறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் முடிவடைந்தும், இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. தமிழகத்தில் கஞ்சா, போதை பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்க அதிமுக வேட்பாளா் ப. அருணாசலத்துக்கு வாக்களியுங்கள் என்றாா். கூட்டத்தில், ஈரோடு புகா் அதிமுக மாவட்டச் செயலாளா் கருப்பண்ணன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் மற்றும் அதிமுக, கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.