தமிழக முதல்வா் வருகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்துக்காக ஈரோட்டுக்கு சனிக்கிழமை (மாா்ச்30) இரவு வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்31) மாலை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையத்தில் நடக்கும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். இதனையொட்டி முதல்வா் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஈரோடு மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் எவ்வித ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
முதல்வர் ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை: ட்ரோன் பறக்க தடை

நெல்லை மாநகரில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை

துணை முதல்வா் திருப்பத்தூா் வருகை: மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


