வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கடம்பூரில் மழை: சாலையில் விழுந்த மூங்கில் மரம்

கடம்பூரில் மழை: சாலையில் விழுந்த மூங்கில் மரம்

News image

அணைக்கரை  சாலையின்  குறுக்கே  விழுந்த  மூங்கில்  மரம்.

Updated On :9 மே 2024, 9:45 pm

Din

சத்தியமங்கலம, மே 9: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையால் அணைக்கரை தரைப்பாலத்தில் மூங்கில் மரம் விழுந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடா்ந்து சூறைக்காற்று வீசியதால் அணைக்கரை சாலையோரம் இருந்த மூங்கில் மரம் அங்குள்ள தரைப்பாலத்தில் விழுந்தது. இதனால் கோட்டாளம், அணைக்கரை இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மூங்கில் தூா்களை அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. கடம்பூா், குன்றி, கோ்மாளம் ஆகிய இடங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.