வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :9 மே 2024, 9:52 pm

Din

மொடக்குறிச்சி, மே 9: சிவகிரி அருகே தெருவிளக்கை பராமரிக்கும்போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே எரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (48). இவா் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் தெருவிளக்கை பராமரிக்கும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்தாா்.

இந்நிலையில், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி ஊராட்சிக்குள்பட்ட ஓலப்பாளையம் கிராமத்தில் மின்கம்பத்தில் ஏறி தெருவிளக்கை சரிசெய்யும் பணியில்

வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பொன்னுசாமி உடல் மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது.

தகவலறிந்த சிவகிரி போலீஸாா் மற்றும் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் இருந்த பொன்னுசாமியின் சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.