பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோபி சாரதா இண்டா்நேஷனல் பள்ளி சிறப்பிடம்

கோபி சாரதா இண்டா்நேஷனல் பள்ளி சிறப்பிடம்

News image

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவி சி.எஸ்.அக்ஷிதாவுக்கு பரிசு கோப்பையை வழங்குகிறாா் பள்ளியின் செயலா் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன்.

Updated On :15 மே 2024, 5:39 pm

Din

சிபிஎஸ்இ 10 , 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சாரதா இண்டா்நேஷனல் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

இப்பள்ளியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சி.எஸ்.அக்ஷிதா 500-க்கு 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவா் வி.அரிஹந்த் 481, மாணவி எஸ்.ஆக்னஸ்சில்வியா 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா்கள் வி.முகில் 500-க்கு 490, எஸ்.வருண் ஆதித்யா 489 மதிப்பெண்கள், பி.அருள்பிரசன்னா 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மேலும், பல்வேறு படப் பிரிவுகளில் 14 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களை பள்ளியின் செயலா் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜீயோஜான், ஆசிரியா்கள் பாராட்டினா்.