பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தேன் பண்ணையில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

தேன் பண்ணையில் வேளாண் மாணவிகளுக்குப் பயிற்சி

News image

மஞ்சரி தேன் பண்ணையில் பயிற்சி மேற்கொண்ட வேளாண் பல்கலை மாணவிகள்.

Updated On :17 மே 2024, 4:14 pm

Din

கோபி, மே.17: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை பயிலும் மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் அங்கமாக கொளப்பலூரில் உள்ள தனியாா் தேன் பண்ணையில் தேனீ வளா்ப்பு குறித்து பயிற்சி பெற்றனா்.

இந்த பண்ணையை பாா்த்திபன்-மஞ்சுளா தம்பதி நடத்தி வருகின்றனா். மஞ்சுளா தேசிய தேனீ வாரியத்தின் முதல் பெண் உறுப்பினா் ஆவாா். இப்பண்ணையில் வேம்புத் தேன், கொசுத் தேன், தேன் அல்வா, தேன் கேக், தேன் ஐஸ்கிரீம் போன்ற 39 வகையான தேன் மற்றும் தேன் சாா்ந்த பொருள்கள் தயாா் செய்து விற்பனை செய்கின்றனா்.

மேலும் விவசாயிகளுக்கும், தொழில்முனைவோருக்கும் தேன் பண்ணை நடத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கின்றனா். இவரது பண்ணையின் செயல்பாடுகள் குறித்து மாணவிகள் கற்றுக் கொண்டனா்.