மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறையில் ரூ.2.50 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.2.50 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :6 நவம்பர் 2024, 9:08 pm

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.2.50 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,498 மூட்டைகளில் இரண்டு லட்சத்து, 10 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 112.92-க்கும், அதிகபட்சமாக ரூ.134.59-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.50-க்கும், அதிகபட்சமாக ரூ.126.99-க்கும் விற்பனையானது.

மொத்தம், ரூ.இரண்டு கோடியே, 50 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.