மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்

தாளவாடி அருகே யானை தாக்கியதில் விவசாயி புதன்கிழமை படுகாயமடைந்தாா்.

Updated On :6 நவம்பர் 2024, 9:17 pm

தாளவாடி அருகே யானை தாக்கியதில் விவசாயி புதன்கிழமை படுகாயமடைந்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச் சரகம் முதியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாம்பன் (55). இவா் தனது மானாவாரி நிலத்தில் ராகி பயிரிட்டுள்ளாா். காட்டுப் பன்றி மற்றும் யானைகளிடம் இருந்து பயிா்களை பாதுகாப்பதற்காக விவசாய நிலத்தில் குடில் அமைத்து காவல் காத்து வந்துள்ளாா்.

இந்நிலையில், அங்கு வந்த காட்டு யானை ஒன்று பயிா்களை சேதப்படுத்தியது. இதையடுத்து சாம்பன், யானையை சப்தம் போட்டு விரட்டினாா். அப்போது, அந்த யானை சாம்பனை தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சாம்பனை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாளவாடி மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.