பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறையில் ரூ.2.20 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2024, 7:07 pm

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 79 ஆயிரம் கிலோ தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.118.42 முதல் ரூ.139.01 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.20 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.