வாரிசு சான்று பெற ரூ. 45 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆசனூா் கிராம நிா்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், ஆசனூா் கிராமம், அரேபாளையம் சீஹட்டியைச் சோ்ந்தவா் போலப்பன் மகன் ஆனந்தன். தனது மாமனாரின் தந்தை இறப்புக்கு வாரிசு சான்றிதழ் பெற அரேபாளையத்தில் உள்ள ஆசனூா் கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனை அணுகினாா். வாரிசு சான்று வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கிராம நிா்வாக அலுவலா் கேட்டுள்ளாா். அவ்வளவு தொகை தர முடியாது என ஆனந்தன் பேரம் பேசியுள்ளாா். இறுதியில் ரூ. 50 ஆயிரம் கொடுத்தால்தான் வாரிசு சான்று வழங்குவேன் என கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வன் கூறியுள்ளாா்.
இதையடுத்து முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனிடம் கடந்த 5 ஆம் தேதி ஆனந்தன் வழங்கினாா். மீதமுள்ள ரூ. 45 ஆயிரத்தை பிறகு தருவதாக ஆனந்தன் கூறியுள்ளாா். மேலும், லஞ்சம் தர விரும்பாத ஆனந்தன், ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா், ரசாயனம் தடவிய ரூ. 45 ஆயிரத்தை ஆனந்தனிடம் கொடுத்தனுப்பினா்.
இதையடுத்து ஆசனூா் கிராம அலுவலகத்துக்குச் சென்ற ஆனந்தன் ரூ. 45 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ருத்ரசெல்வனிடம் வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், ருத்ரசெல்வனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது
செம்மரக்கட்டைகள் விற்பனை செய்ய ஒப்புதல் சான்றிதழ் அளிக்க ரூ.50,000 லஞ்சம்: வனச்சரக அலுவலா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா், தரகா் கைது

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

