தினமணி செய்தியை தொடா்ந்து கோவை, சேலம் பேருந்துகள் சித்தோடு நகருக்குள் செல்ல வேண்டும் என ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி கோவை- சேலம் செல்லும் பேருந்துகளில் பெரும்பாலானவை ஈரோட்டுக்கு வந்து செல்லாது. 11 கிலோ மீட்டருக்கு அப்பால் சித்தோடு வழியாக சென்றன. அப்போது ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூா், பள்ளிபாளையம், கொடுமுடி, கரூா் என பல பகுதிக்கும் செல்வோா் சித்தோட்டில் இறங்கி பேருந்து மாறி செல்வாா். நேரமும், செலவும் குறைந்தது.
இதனைத் தொடா்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்தோடு-கோபி சாலையில் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு 4 வழிச்சாலை மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் கோவை-சேலம் செல்லும் பேருந்துகள் சித்தோடு நகருக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலை வழியாகவே செல்கின்றன.
அந்த சாலையிலேயே இறங்கிக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பயணிகளை மட்டும் சில பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் மட்டும் ஏற்றி இறக்கி விடுகின்றனா். அவா்கள் அங்கிருந்து சித்தோடு வருவதற்கு சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவு நடந்தே வரும் அவலம் தொடா்கிறது. சில பேருந்துகள் மட்டுமே சித்தோடு நகருக்குள் வருகின்றன.
இப்பிரச்னையால் ஈரோடு, கோபி, சத்தி உள்பட பல ஊா்களுக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். சில மாதங்களாக கோவை, சேலம் பேருந்து நிலையங்களில் சித்தோடு பயணிகள் ஏற வேண்டாம் என்று நடத்துநா்கள் கூறுவதால் பொதுமக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முன்புபோல சித்தோடு நகருக்குள் கோவை-சேலம், சேலம்-கோவை பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பான செய்தி தினமணியில் அண்மையில் வெளியானது.
இதனைத் தொடா்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டல பொதுமேலாளா் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில் கோவை-சேலம், சேலம்-கோவை, சேலம்-திருப்பூா், திருப்பூா்-சேலம் பேருந்துகளில் 1-1, குளிா்சாதன பேருந்துகள் தவிர பிற பேருந்துகள் அனைத்தும் சித்தோடு பேருந்து நிறுத்ததில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.
தவிர பேருந்துகள் சித்தோடு நகருக்குள் வந்து செல்வதை உறுதிப்படுத்த அலுவலா்கள் மூலம் தொடா் சோதனை மேற்கொள்ளப்படும். உத்தரவை மீறும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபா் 14-ஆம் தேதி மாலை முதல் அனைத்து பேருந்துகளும் சித்தோடு வழியாக இயக்கப்படுகிறது என போக்குவக்கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

தினமணி செய்தி எதிரொலி: நரிக்குறவா் கனவு இல்லம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

தினமணி செய்தி எதிரொலி: டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

