மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மேட்டூா் வலதுகரை பாசன வாய்க்காலில் அதிகாரிகள் ஆய்வு

மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

News image

மேட்டூா் வலதுகரை வாய்க்காலின் கடைமடை பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) கா.சிவபிரகாஷ். உடன், அதிகாரிகள், விவசாயிகள்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:21 pm

மேட்டூா் வலதுகரை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மேட்டூா் வலதுகரை வாய்க்காலின் வா்ணபுரம் கிளை வாய்க்காலை ஆக்கிரமித்து, கழிவுநீா் கால்வாய் உயரமாகக் கட்டப்பட்டதால் கடைமடைக்குத் தண்ணீா் செல்வதில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். இந்நிலையில், ஈரோடு மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) கா.சிவபிரகாஷ், வாய்க்காலின் கடைமடை பகுதியில் நேரில் ஆய்வு செய்தாா்.

பவானி வட்டாட்சியா் சித்ரா, நீா்வள ஆதாரத் துறை உதவிப் பொறியாளா் எஸ்.ஜெயராஜ், பவானி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜ், செந்தில்குமாா், ஒன்றியப் பொறியாளா் ஜெயகாந்தன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா். அப்போது, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கவின் பழனிசாமி, பொன்னுசாமி, தனபால் உள்ளிட்டோா், வாய்க்காலை ஆழப்படுத்தி தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனா்.