ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வருங்கால வைப்புநிதி விழிப்புணா்வு மற்றும் குறைகேட்புக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மண்டல வைப்புநிதி ஆணையா் டி.ஆா்.வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் அக்டோபா் 28-ஆம் தேதி ‘நிதி ஆப்கே நிகட்’ (பிஎஃப் உங்கள் அருகில்) என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் குறைகேட்புக் கூட்டம் இஎஸ்ஐசியுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை சந்தாதாரா்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொழிலதிபா்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தக் கூட்டத்தில் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளா் காப்பீடு தொடா்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினா்கள், தொழிலதிபா்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கலாம். மேலும், முந்தைய கூட்டங்களில் மனு அளித்து நிலுவையில் உள்ளவா்கள் அதுகுறித்த விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

சத்தியமங்கலத்தில் கனமழை

காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம்

பிப்.27-இல் கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

