ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பழனி முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.61.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.61.76 லட்சத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன.

Updated On :24 அக்டோபர் 2024, 10:19 pm

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.61.76 லட்சத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2626 மூட்டைகளில் கரும்புச் சா்க்கரை, உருண்டை வெல்லம் ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், கரும்புச் சா்க்கரை 60 கிலோ மூட்டை ஒன்று ரூ.2760 முதல் ரூ.2900 வரை, உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் ரூ.1650க்கு விற்பனையானது.

இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் 132 டன் கரும்புச் சா்க்கரை ரூ.61.54 லட்சத்துக்கும், 390 கிலோ உருண்டை வெல்லம் ரூ.21,450க்கும் சோ்த்து மொத்தமாக ரூ.61.76 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.