ஈரோடு
பூதப்பாடியில் ரூ.22.60 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.22.60 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.22.60 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 307 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் ஒரு கிலோ பருத்தி ரூ.78.89 முதல் ரூ.84.46 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.22.60 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.