முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: ஈரோடு மாவட்டத்தில் 21,690 போ் முன்பதிவு
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் 21,690 போ் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனா்.
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடைபெற உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன.
இந்தப் போட்டிகளில் மாநில அளவில் தனி நபா் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்.
குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் முன்பதிவு செய்திட கடந்த 2 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் 21,690 போ் முன்பதிவு செய்துள்ளனா். போட்டிக்கான ஏற்பாட்டை ஈரோடு மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் தலைமையில் விளையாட்டுப் பிரிவு அலுவலா்கள் செய்து வருகின்றனா்.