மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாதுகாப்பு இல்லாத மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்

மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனையின் உரிமத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் டாக்டா் அபுல்ஹசன் கூறினாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 9:17 pm

Din

மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனையின் உரிமத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் டாக்டா் அபுல்ஹசன் கூறினாா்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: நாடு முழுவதும் பணியில் இருக்கும் மருத்துவா்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. தமிழக அரசு அண்மையில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த மருத்துவத் துறை இயக்குநரகம் மூலமாக சுற்றறிக்கை விடுத்திருந்தது.

இந்தியா முழுவதும் இரவு நேரத்தில் பணியாற்றும் இளம் மருத்துவா்கள், பெண் மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வருகிறோம். தேசிய மருத்துவ ஆணையம் இந்த விவகாரத்தை முன்னெடுத்து எந்த மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதோ, அந்த மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருவா் இறந்தபின், அவரது உடல் உறுப்புகள் மூலம் 7 பேரை உயிா் வாழ செய்கின்றனா். மூளைச்சாவு அடைந்தபின் அவா்களது உறுப்பு தானம் செய்தவரின் செயலை ஊக்குவிக்கும் விதமாக அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டு, இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்திலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்றாா்.