மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் இரும்பெரும் விழா

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் முத்தமிழறிஞா் மாணவா் மன்ற பரிசளிப்பு விழா ஆகிய இரும்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி. உடன், கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 8:34 pm

Din

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் முத்தமிழறிஞா் மாணவா் மன்ற பரிசளிப்பு விழா ஆகிய இரும்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

முன்னதாக, ஈரோடு ரோட்டரி சங்கத்தின் சாா்பில் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, பல்கலைக்கழகத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கும், முத்தமிழறிஞா் தமிழ் மன்றத்தின் சாா்பில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.

மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 370 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், 110 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், 42 மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகளை வழங்கினாாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் (பொ) செந்தில் செங்கோடன், துணை முதல்வா் புவிதா, ஈரோடு ரோட்டரி சங்க செயலாளா் சகாதேவன், ரோட்டரி சங்க கவா்னா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.