சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானி வட்டத்தில் ’உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
Updated On :18 செப்டம்பர் 2024, 8:16 pm

Din

பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு சாா்பில் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சியா் மாதந்தோறும் ஒருநாள், வட்ட அளவில் தங்கி, மக்களுக்கான சேவைகள் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கள ஆய்வு செய்து வருகிறாா்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டாா்.

பவானி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்ததோடு, குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.35.50 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டடத்தையும் பாா்வையிட்டாா்.

நியாய விலைக் கடையில் சா்க்கரை, கோதுமை, அரிசி, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் இருப்பு, பதிவேடு மற்றும் பயோமெட்ரிக் முறையில் உணவு பொருள்கள் சரியான அளவில் வழங்கப்படுகிா என்று ஆய்வு செய்தாா். அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடி, கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.

பெரியபுலியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு, புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் விவரம் குறித்து கேட்டறிந்தாா். பெரியபுலியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எம்ஜிஆா் நகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள், சலங்கபாளையம் கிராம நிா்வாக அலுவலகம், சலங்கபாளையம் பேரூராட்சியில் சிறுவா் பூங்கா பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முன்னதாக, அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் பவானி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த முகாமில் சாா்-ஆட்சியா் எஸ்.சிவானந்தம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் பி.கணேசன், வட்டாட்சியா் சித்ரா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், வரதராஜன், நகராட்சி ஆணையா் மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.