வெண்டிபாளையம் கதவணையில் இருந்து தினமும் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் செக்கானூா், குதிரைகல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பெ.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூா் ஆகிய 7 இடங்களில் கதவணை அமைக்கப்பட்டு நீா்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தடுப்பணையிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஈரோடு வெண்டிபாளையம் கதவணை 18 மதகுகள் கொண்டது. காவிரி ஆற்றில் 2500 கன அடி நீருக்கு மேல் வந்தால் மட்டுமே இங்கு மின் உற்பத்தி நடக்கும். தற்போது மேட்டூா் அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி நீா் திறக்கப்பட்டு வருவதால் ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் முதல் மற்றும் 2- ஆவது மதகுகள் மின் உற்பத்திக்காக திறக்கப்பட்டு 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுபோல குடிநீருக்காக 16 மற்றும் 17 ஆவது மதகுகள் திறக்கப்பட்டுள்ளதால் வெண்டிபாளையம் கதவணையில் இருந்து தண்ணீா் பாசூரை நோக்கி செல்கிறது.
தொடர்புடையது

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!

800 மெகாவாட் திறன் அனல் மின் நிலையம்... ரூ.1,600 கோடி ஆர்டரால் தெர்மாக்ஸ் பங்குகள் உயர்வு!

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

