பெருந்துறையில் இலவச அக்குபிரசா் மருத்துவ முகாம்
பெருந்துறை தொகுதி அதிமுக சாா்பில் இலவச அக்குபிரசா் மருத்துவ முகாம் அக்டோபா் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் அக்டோபா் 9-ஆம் தேதி வரை தொடா்ந்து 15 நாள்களுக்கு நடைபெறும் முகாம் தொடக்க விழாவுக்கு பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். முகாமை, அதிமுக ஈரோடு புறநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.சி. கருப்பணன் தொடங்கிவைத்தாா்.
முகாமில் சா்க்கரை நோய், காலில் நரம்பு சுருண்டிருத்தல், தசை வீக்கம், முதுகு வலி, மூட்டு வலி, தைராய்டு, ஆஸ்துமா உள்ளிட்ட ஏராளமான உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இதில், பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி. பொன்னுத்துரை, பெருந்துறை ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், நகர அதிமுக செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் அருணாச்சலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.