கெஜலட்டி தா்கா சந்தனக்குட உரூஸ் விழா தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் மாயாற்றின் கரையில் பழைமைவாய்ந்த திப்பு சுல்தான் காலத்து தா்கா அமைந்துள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த தா்காவில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சமுதாயத்தின் சாா்பில் சந்தனக்குட உரூஸ் விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா செப்டம்பா் 27 முதல் 30- ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
அடா்ந்த வனப்பகுதியில் தா்கா அமைந்துள்ளதால் விழா நடத்துவது தொடா்பான
ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சத்தியமங்கலம் வட்டாட்சியா் சக்திவேல் தலைமை வகித்தாா். சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பவானிசாகா் வனச்சரக அலுவலா் சதாம் உசேன் வரவேற்றாா். இதில் விழா கமிட்டியை சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், சென்னை உயா்நீதிமன்றத்தின் நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை கடைப்பிடித்து விழா நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தவாக ஆலோசனைக் கூட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!

ஸ்ரீசொா்ணகால பைரவா் கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


