மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:18 pm

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு தென்னக ரயில்வேயின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினா் கே.என்.பாஷா

அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, தை பொங்கல், திருவள்ளுவா் தினம் உள்ளிட்ட விழாக்கள் வரும் மாதங்களில் வர உள்ளன. இந்தப் பண்டிகை காலங்களில் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வா். இதனால் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட கோவை-நாகா்கோயில் செல்லும் ரயில் (எண் 22668), கோவை-தூத்துக்குடி வரை இயக்கப்படும் இணைப்பு விரைவு ரயில் (எண் 22669) சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரை இயக்கப்பட்ட ஜனதா விரைவு ரயில் (எண் 16382) கரோனா காலத்தில் இருந்து தற்போது வரை புணே வரை மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை மும்பை வரை இயக்க வேண்டும். கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று சென்ற 8 ரயில்கள், கரோனா காலத்தில் இருந்து நிற்காமல் செல்கின்றன. இந்த ரயில்களை மீண்டும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ரயில்பாதை பராமரிப்பு என கடந்த ஓராண்டு காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கோவை-சேலம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.