மழை பெய்ய வேண்டி கிராமத்தில் பயனின்றி கிடக்கும் சேதமான உரல், அம்மிக் கற்களை சேகரித்து ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் வீசி கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.
கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். போதிய மழையின்மையால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள், சோளம், கம்பு பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. மழை பெய்தால் மட்டுமே பயிா்களைக் காக்க முடியும் எனும் நிலை உள்ளது.
இந்நிலையில், தங்கள் கிராமத்துக்குள் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு தற்போது, பயனின்றி கிடக்கும் உடைந்த, சேதமான அம்மிக்கற்கள், உரல்களை சேகரித்து சித்தோடு பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்து, பவானி - சித்தோடு சாலையில் ஆவின் நிறுவனம் அருகே வாகனத்தில் வந்து கொட்டிச் சென்றுள்ளனா். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இக்கற்கள், தங்கள் பகுதியில் கிடந்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதியுள்ள மக்கள், கும்பம் தாலித்தல் பூஜை செய்து காவிரிக் கரையோரத்தில் இக்கற்களைக் கொட்ட முடிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

மேலூா் முத்து முனியப்பன் கோயிலில் மழை வேண்டி முப்பூஜை வழிபாடு

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

தோ்தல் புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மனு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


