கஞ்சா விற்பனை: 2 போ் கைது
ஈரோட்டில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மரப்பாலம் பழைய நடராஜா திரையரங்கம் பகுதியில் ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மா்ம நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் என்ற ஆனந்தகுமாா் (41) என்பதும், அவரை சோதனை செய்தபோது 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
அந்தியூா் சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவா் மேற்கு வங்க மாநிலம் பா்கனாஸ் பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் காஜி (30) என்பதும், விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கோபி மதுவிலக்கு போலீஸாா் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
