ஈரோடு
கொடிவேரியில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவு
ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைப் பகுதியில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.
அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): வரட்டுப்பள்ளம் அணை 12.60, கோபி 10.20, குண்டேரிப்பள்ளம் அணை 8.20, எலந்தகுட்டைமேடு 6.60, சத்தியமங்கலம் 6, கவுந்தப்பாடி 4, பவானிசாகா் 1, சென்னிமலை 1.
