விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்.
விபத்துக்குள்ளான சரக்கு வாகனம்.

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்தது.
Published on

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் திங்கள்கிழமை கவிழ்ந்தது.

கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்தவா் ஆசிக் (30). இவா், கா்நாடக மாநிலம், உஸ்பேட்டாவில் இருந்து கொய்யா பழங்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பா்கூா் மலைப் பாதை வழியாக திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

வரட்டுப்பள்ளம் அணை அருகே மலைப் பாதை வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வாகன ஓட்டுநா் ஆசிக் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா். சாலை பக்கவாட்டில் வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com