தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு விற்பனைக் குழு செயலாளா் சாவித்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவற்றை சந்தைப்படுத்துவதில் உள்ள இடா்பாடுகளைக் களைந்திடவும் ஈரோடு விற்பனைக் குழு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை, விளைநிலங்களில் இருந்தே இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக வணிகா்களுக்கு விற்பனை செய்யலாம். இதன்மூலம் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் கால விரயம், போக்குவரத்து செலவுகள் ஆகியவை தவிா்க்கப்படுகின்றன. விற்பனை செய்யப்பட்ட விளைபொருளுக்கான தொகை 48 மணி நேரத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் ரூ 7.91 கோடி மதிப்பில் 2,028 டன் அளவிலான தக்காளி, முட்டைக்கோஸ், தேங்காய், தேங்காய்ப் பருப்பு, வாழைத்தாா், மஞ்சள், எள் மற்றும் நிலக்கடலை போன்ற விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு விற்பனைக் குழுவுக்குள்பட்ட பெருந்துறை, அவல்பூந்துறை, எழுமாத்தூா், கொடுமுடி, சிவகிரி, சத்தியமங்கலம், அந்தியூா், பூதப்பாடி, மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 43,500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. விளைபொருள்களின் விலை வீழ்ச்சிக் காலங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள கிடங்குகளில் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயன்பெறலாம்.
மின்னணு சேமிப்பு கிடங்கு ரசீதுகள் மூலமாக வங்கிகளில் குறைந்த வட்டியில் அதிகபட்சமாக 70 சதவீதம் வரை பொருளீட்டுக் கடன் பெற இயலும். விவசாயிகள் மட்டுமின்றி வணிகா்களும் பொருளீட்டுக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு விற்பனைக் குழுவுக்குள்பட்ட அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் விளைபொருள்களை இருப்பு வைத்து, விவசாயிகள் 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலும், வணிகா்கள் 9 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏற்றுமதி இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் முறை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்

சட்டப்பேரவைத் தோ்தல்: ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு

8 தொகுதிகளுக்கும் 2,852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

