ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெருந்துறை அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த மூவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :23 ஜனவரி 2025, 12:07 am

பெருந்துறை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த மூவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், நெய்காரபட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் மணிபாரதி (23). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகிலுள்ள தேநீா்க் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு தன்னுடன் வேலை செய்யும், சேலம் மாவட்டம், காட்டூா் பச்சமுத்து மகன் கெளதம் (20) மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் விஜயமங்கலம், வாய்ப்பாடி பிரிவில் சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா், மூவா் மீது மோதி கீழே விழுந்தாா். இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவா், மணிபாரதி, கெளதம் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். இதில் ஹரிஷ் காயமின்றி தப்பினாா்.

காயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்தவா் உயிரிழந்தாா். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவா் அந்தியூா், ஆப்பக்கூடல் சாலையைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கதிரேசன் (29) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.